“வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயங்கள்” - இது ஜெயகாந்தன் எழுதிய பிரபலமான வாக்கியம். இதே அர்த்தம் கொண்ட வாக்கியம் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. “அவ்அவ் இடத்தான் அவைஅவை காண” - அந்தந்த விஷயங்களை அவை அவை நிகழ்ந்த சூழ்நிலையை வைத்துக் காண வேண்டும்! கலித்தொகையில் வருவது.