“இ ஊர்” என்றால் இந்த ஊர். “எ ஊர்” என்றால் எந்த ஊர். அ ஊர் என்றால் அந்த ஊர். உ ஊர் என்றால் உன் ஊர். எ ஊர் என்றால் என் ஊர். ஒ ஊர் என்றால் ஒரே ஊர். சாரி, இப்படியெல்லாம் இல்லை.
மகிழ்ச்சியாக இருக்கும் கணவன் “மகிழ்நன்”.
“தொகுத்து” என்றால் இன்றைய அர்த்தம்தான். Collecting.
“மங்கையர் தொகுத்து” என்றால் மங்கையரைக் collecting.
“இ ஊர் மங்கையர் தொகுத்து இனி
எ ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே”
“இந்த ஊரிலுள்ள பெண்களைத் தொகுத்துக் கொண்டு எந்த ஊரில் போய் நிற்கப் போகிறது உன் கார்? (அந்த காலத்தில் தேர்)”, என்று அந்த மகிழ்நனைப் பார்த்துக் கேட்கிறாள் அவன் மனைவி. இவர்களுக்கு ஒரு பையன் இருப்பதாக அடுத்த பாடல்களில் வருகிறது.
“நறியர் நின் பெண்டிர். பேஎய் அனையம், யாம். சேய் பயந்தனமே” என்கிறாள். “உன் பெண்களெல்லாம் வாசமாக இருக்கிறார்கள் (நறியர் நின் பெண்டிர்). நான் பேய் போல் இருக்கிறேன் (பேஎய் அனையம், யாம்). பிள்ளையைப் பெற்றதனாலே (சேய் பயந்தனமே)”, என்கிறாள்.
(ஐங்குறுநூறு 61-70)