‘கிளவி’ என்றால் ‘கிழவி’ இல்லை என்பது நமக்குத் தெரிந்ததே. இரட்டைக் கிளவி என்றால் இரட்டைச் சொற்கள். கட கட. கல கல. ‘கிளவியள்’ என்றால் பேசுபவள். ‘இன் கிளவியள்’ என்றால் இனிமையாகப் பேசுபவள். பாணர்கள் என்பவர்கள் சங்க காலத்தில் இசையமைப்பாளர்கள். இன்றைய கிட்டார், வயலின், வீணை… சங்க கால யாழ் போன்றவை நரம்புக் கருவிகள். கம்பியைச் சுண்டத் தெரிந்தவர்கள் சுண்டினால் இசை வரும். நாம் சுண்டினால் டொய்ங் டொய்ங் சத்தம் வரும். ஓசையை இசையாக்க இசைப்பவர் தேவை. யாரும் தொடாத பட்சத்தில் ஒரு சத்தமும் வராது. அது வெறும் நரம்பு. ‘பாணர் நரம்பினும் இன் கிளவியள்’ என்றால்… ஓரம்போகியார் உபயோகித்த சொற்றொடர். இந்த வரியை தியானித்துப் பார்த்தால் மெஞ்ஞானம் வரும்.